செங்கல்பட்டு ஆக, 31
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கம்பாக்கம், முள்ளி கொளத்தூர், ஈகை ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புக், ஆகியவற்றை பெற்று சோதனை செய்தார்.
இந்த ஆய்வின் போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கம்பாக்கம் ஊராட்சி தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டன.