விருதுநகர் ஆக, 31
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கண்தானம் செய்த 30 குடும்பங்களுக்கு பாரட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
மேலும் கண்தானத்திற்கு சிறப்பாக செயல்பட்ட தற்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சங்குமணிக்கு, பார்வை யிழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்டமேலாளர் பொன்னுசாமி, கண் மருத்துவத்துறைத்தலைவர் பாரதிராஜன், சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் சீதாலட்சுமி ஆகிேயாருக்கு நினைவு நினைவு பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் வெங்கடேஷ் பிரஜ்னா, அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி மேலாளர் சரவணன், அரசு மருத்துவர்கள், கண் தானம் செய்த குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.