துபாய் ஆக, 29
ஐக்கிய அரபு அமீரக துபாயில், கல்ப்ஃ கட்ஸ் நிறுவர்களான பிரவீன், ஜெயராஜ், தாமோதரன் மற்றும் கல்ப்ஃ கட்ஸ் அணியினர், எடுத்து நடத்திய இன்டர்நேஷனல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2023 (சர்வதேச குறும்பட போட்டி) ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் உள்ள ஷபாப் வில்லேஜ் மாலில் உள்ள திரையரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை ஆலம் மற்றும் ஜெகன் தொகுத்து வழங்கினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் பதிவு செய்யப்பட்டு 84 குறும்படங்கள் அனுப்பப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் நடுவராக, தென்னிந்திய திரையுலகில் தேசிய விருதுகள் பெற்ற மாபெரும் இயக்குனரான சேரன் கலந்து கொண்டார். இவரோடு இணைந்து சிறப்பு விருந்தினர்களாக மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி , யூடுயூப்பில் பிரபலமான வலைப்பேச்சு குழுமத்தின் பிஸ்மி மற்றும் அந்தணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மேலும் அமீரகத்தைச் சேர்ந்த சிறப்பு விருந்தினராக டாக்டர் ஹக்கீம் கெல்வின், மங்கயார் அமீரகம் ப்ரீத்தி சுமி, டாக்டர் ஹக்கீம், க்ரீன் ரேஞ்சர் கறுப்பயா, அரவிந்த் குரூப் பிரபாகரன், A2B ராஜு , ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத், க்ரீன் க்ளோப் யாஸ்மின், ட்ராவல் சோன் SKV ஷேக், வணக்கம் பாரதம் வளைகுடா இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, ரவி, TEPA பால், பாளையங்கோட்டை ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நடுவரான இயக்குனர் சேரனால் பத்து குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை திரையில் ஒளிபரப்பப்பட்டன. அவற்றில் முதல் ஐந்து இடங்களை பெற்ற குறும்படங்கள் இயக்குனரால் அறிவிக்கப்பட்டது. அதில் ஐந்தாவது இடத்தில் காதல் மூன்று அடி, நான்காவது இடத்தில் அடிமைகள், மூன்றாவது இடத்தில் பெயிண்டட் மெமோரிஸ், இரண்டாவது இடத்தில் பைண்டிங் பீஸ் மற்றும் முதலிடத்தில் நடுவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த குறும்படமாக பனையேறி எனும் குறும்படம் அறிவிக்கப்பட்டது.
இதைத் தவிர மூன்று சிறப்பு பரிசுகளான சிறந்த இயக்குனர் – பெயிண்டட் மெமோரிஸ், சிறந்த ஒளிப்பதிவாளர் – பைண்டிங் பீஸ், மற்றும் சிறந்த எடிட்டர் அடிமைகள் ஆகிய குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இயக்கிய குறும்படங்களில் இரண்டு சிறந்த குறும்படங்களான அக்னி, காலச்சக்கரம் எனும் குறும்படங்களை இயக்குனர் சேரன் அவர்கள் தேர்ந்தெடுத்து திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதில் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு பகுதியாக, கல்ப்ஃ கட்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வமான “கல்ப்ஃ கட்ஸ் கிரியேட்டிவ் சினிமேடிக் ஸ்டுடியோ” எனும் அடுத்த தளத்தை இயக்குனர் சேரன் முன்னிலையில் வெளியிட்டது. இதில் தங்களின் முதல் படைப்பான “ட்ரிப்யூட் டு இளையராஜா” என்ற மியூசிக் ஆல்பத்தை இயக்கி அதுவும் திரையிடப்பட்டது. இந்த ஆல்பம் மற்றும் கல்ப்ஃ கட்ஸ் மியூசிக் டீம் அனைவரையும் இயக்குனர் சேரன் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் அனைத்து அமீரக சிறப்பு விருந்தினர்களையும் கல்ப்ஃ கட்ஸ் நிறுவர்கள் கௌரவித்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.