சென்னை ஆக, 29
சென்னையில் பகல் பொழுதில் வெயில் வாட்டி எடுத்தாலும் தற்போது பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணா நகர், எழும்பூர், கிண்டி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், நந்தனம், வடபழனி உட்பட பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. முன்னதாக இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.