விழுப்புரம் ஆகஸ்ட், 19
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத்திட்டத்தின் கீழ் அரசு கடனுதவிகளை வழங்கி வருகிறது.
மேலும் விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் இயங்கும் கிளை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா வருகிற அக்டோபர் 2 ம் தேதி வரை நடைபெறுகிறது.
இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய- மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள், மற்றும் கடன் உதவிகள் வழங்கப்பட உள்ளது எனவே தொழில் முனைவோர் சுயதொழில் புரிய ஆர்வம் உடையோர், தொழில் திட்டங்களுடன் வருகைதந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.