தேரி ஆக, 22
உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று தேரி மாவட்டத்தில் சம்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இச்சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த நான்கு பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு கார் நிறுத்தம் பகுதியில் ஏற்பட்டதால் இதில் மேலும் பல சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.