சேலம் ஆக, 22
தமிழகத்தில் சேலம் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் காலையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே பள்ளி கல்லூரி அலுவலகத்திற்கு செல்வோர் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.