டெல்லி ஆகஸ்ட், 19
மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலவேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கும் ஜென்மாஷ்டமி, பக்தர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. . நமது வாழ்க்கையில் இது அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும் என அவர் கூறியுள்ளார்.