திருவண்ணாமலை ஆக, 11
திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்துக்கு சென்ற ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆசிரமம் உள்ளே ஆளுநர் நுழையும் போது காவல்துறையினரை மீறி கருப்புக்கொடி காட்டினர். தமிழகத்தை விட்டு ஆளுநர் ரவி வெளியேற வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.