ராமநாதபுரம் ஆக, 9
சுங்க இலாகாவில் பணி புரிந்த பாம்பனை சேர்ந்த சைன் தீன் அவர்களும் ஆசிரியராக பணி புரிந்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சங்கரலிங்கம் அவர்களும் பணி நிமித்தமாக தூத்துக்குடியில் அருகருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இருவரும் ஜாதி, மதம் பாராது உற்ற நண்பர்களாகவும் பழகி வந்தனர். பணி நிமித்தமாக இடமாறுதலாகி சென்றனர். ஆனாலும் இருவருக்குள்ளும் நட்பின் பூ மலர்ந்து கொண்டே இருந்துள்ளது.
இருவருமே பணி நிறைவு பெற்று பேரன்,பேத்தி என அவரவர் ஊரில் செட்டிலான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது 46 ஆண்டுகளுக்கு பிறகு அம்பாசமுத்திரத்தில் இருக்கும் தனது நண்பர் சங்கரலிங்கம் குறித்து தகவல் சேகரித்து அவரது வீடு தேடி சென்று சந்தித்து நட்பினை தொடர்ந்தார் பாம்பனை சேர்ந்த சைன்தீன்.
வாலிப பருவத்தில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சங்கரலிங்கம் தனது நண்பர் சைன்தீன் அவர்களின் குடும்பத்தாரிடம் காண்பித்து மகிழ்ந்துள்ளார்.
வெறுப்பு அரசியலுக்கு மத்தியிலும் ஜாதி,மத பாகுபாடுகளுக்கு மத்தியிலும் 46 ஆண்டு கால நட்பின் அடையாளங்களாய் ஜொலிக்கும் சங்கரலிங்கம்-சைன்தீன் நண்பர்களுக்கு நமது வணக்கம் பாரதம் இதழ் சார்பில் வாழ்த்துக்கள்.
ஜஹாங்கீர்
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.
