அமெரிக்கா ஆக, 7
அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி 20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் 9, 10ம் தேதிகளில் நடக்கிறது. இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க வருமாறு அதிபர் ஜோ பைடனுக்கு மோடி அழைப்பு விடுத்தார். பிரதமரின் அழைப்பை ஏற்று அவர் வருகை தர உள்ளார்.