புதுடெல்லி ஆக, 2
நாடு முழுவதும் ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விபரங்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி மொத்தமாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 105 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது. மத்திய சரக்கு சேவை வழியாக ரூ.29,773 கோடியும், மாநில சரக்கு சேவை வழியாக 37 ஆயிரத்து 623 கோடியும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக ரூ.85,930 கோடியும் வசூல் ஆகி உள்ளது.