கீழக்கரை ஜூலை, 26
ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை ரோட்டரி கிளப்பின் 2023-2024க்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா MMK ஹனி மஹாலில் (24.07.2023) அன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக டாக்டர் சின்னதுரை அப்துல்லா, டாக்டர் தினேஷ்பாபு, கீதா ரமேஷ், சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் கலந்து கொண்டனர்.
டாக்டர் பௌலியன்ஸ் சிறப்புரையாற்றிட புதிய தலைவராக டாக்டர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளராக எபன் பிரவீன் குமார் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கீழக்கரை வட்டார அளவில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அனைத்து பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
100% தேர்ச்சி காட்டிய அனைத்து பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகளுக்கும் கேடயமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்கள் நசுருதீன், மீரான் அலி, பயாசுதீன், திருப்புல்லாணி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி டாக்டர் ராசிக்தீன், நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்/மாவட்ட நிருபர்.