புதுடெல்லி ஜூலை, 26
நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 339 பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இதுகுறித்து கேள்விக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இவ்வாறு பதிலளித்தார். இந்த ஆண்டு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நிலையில், 2022-ல் 66 பேர் 2021ல் 58 பேர், 2020ல் 22 பேர், 2019ல் 117 பேர், 2018ல் 67 பேரும் உயிரிழந்துள்ளனர்