சென்னை ஜூலை, 20
தமிழகத்தில் ரூ.1000 மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பம், டோக்கனை வீடு வீடாக சென்று நியாய விலை கடை ஊழியர்கள் வழங்குவார்கள். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ரேஷன் கடைகளிலும் இது குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும் டோக்கன் குறித்து அச்சப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.