ஹரியானா ஜூலை, 5
மாநிலம் முழுவதும் 45 வயது முதல் 60 வயது உட்பட்ட திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். மக்கள் குறைதீர் கூட்டத்தில் பேசிய அவர், விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இத்திட்டம் மூலம் 1.25 லட்சம் பேர் பயனடைவர் என்றார். ஏற்கனவே ஹரியானாவில் மூத்த குடிமக்கள் விதவைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.