கீழக்கரை ஜூலை, 4
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருகிவரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமென KLK வெல்ஃபேர் கமிட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு DM கோர்ட் மூலம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று(04.07.2023)கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில் ஒன்சைட் பார்க்கிங் வசதிக்காக கயிறு கட்டப்பட்டிருக்கும் பகுதிக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதென தீர்மானிக்கப்பட்டது.
கீழக்கரைக்குள் வரும் அரசு பேருந்துகளை திருக்குமரன் பாத்திரக்கடை எதிரில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதென்றும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியாகும் பேரூந்துகள் திருக்குமரன் பாத்திரக்கடை அருகில் வைத்து தான் பயணிகளை ஏற்ற வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஒன்சைட் பார்க்கிங் ஏரியா தவிர்த்து வள்ளல் சீதக்காதி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இரண்டு சக்கரம் உள்ளிட அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
கேரள பேருந்துகள் மற்றும் ஆம்னி பஸ்கள்,கனரக சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவைகள் ஊருக்குள் செல்லும் பட்சத்தில் அவைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர்,நகர் மன்ற தலைவர் ,துணை தலைவர், நகர் மன்ற தலைவர்கள்,போக்குவரத்து அதிகாரி,காவல்துறை அதிகாரி மற்றும் KLK வெல்ஃபேர் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.