தர்மபுரி ஆகஸ்ட், 17
தர்மபுரி மாவட்டத்தில், வெள்ளோலை பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே நகுலன் என்பவர் மளிகை கடை நடத்தி வந்தார். அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மதிகோன்பாளையம் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர், துணை ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவல்துறையினர் கடையில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து கடை உரிமையாளர் நகுலனிடம் உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரணை நடத்தி ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து இது போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்து அந்த மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது