சென்னை ஜூலை, 1
ஒரு சமூகத்தினர் பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்த வழியை மாமன்னன் மூலமாக மாரி செல்வராஜ் வெளிப்படுத்தி இருக்கிறார் என இயக்குனர் அமீர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது குறித்து அமீர் மாரி செல்வராஜ் மத மோதல்களை உருவாக்குகிறார் என்பதை தான் ஏற்கவில்லை என கூறினார்.