அமெரிக்கா ஜூலை, 1
பல்கலைக்கழக சேர்க்கையில் இனம், ஜாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் இட ஒதுக்கீடு முறை கல்வியில் மிகவும் முக்கியமான காரணியாக இருக்கும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இந்த தீர்ப்பை விரைவாக புரிந்து கொள்வது அவசியமாகிறது.