புதுடெல்லி ஜூன், 26
இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் பே-வை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம் ஆப்பிள் சாதன பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. மற்ற யுபிஐ செய்திகள் எப்படி செயல்படுகிறதோ அதுபோலவே இதன் இயக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.