சென்னை ஜூன், 19
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார். தாம்பரம் அருகே 5 மணிக்கு நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து அண்ணாமலையுடன் விவாதம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை 6:20 மணிக்கும் விமான மூலம் அவர் கொச்சி செல்ல உள்ளார். அவரது வருகை தமிழக அரசியலில் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.