கிருஷ்ணகிரி ஜூன், 19
கிருஷ்ணகிரி அருகே குறவர் சமுதாய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆந்திர காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க CPM மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 5 பெண்கள் உட்பட 9 பேரை கடத்தி சென்ற சித்தூர் காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து காவலர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய கூறியுள்ளார் அவர்.