ஏர்வாடி ஜூன், 13
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய வருகிற ஜூன் 24 ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நேற்று இரவு 849-வது ஆண்டு திருவிழாவையொட்டி சந்தனக் கூடு ஊர்வலம் தொடங்கி, இன்று அதிகாலையில் தர்காவை அடைந்தது.