கீழக்கரை ஜூன், 15
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான நாய்கள் வலம் வருகின்றன. இதில் நோய்வாய்ப்பட்ட சொறி நாய்களும் அடங்கும்.
படத்தில் பார்க்கும் நோய்வாய்ப்பட்ட நாய் ஊர் முழுவதும் குறிப்பாக பள்ளி குழந்தைகள் செல்லும் முக்கிய சாலைகளில் சுற்றி திரிகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கூட சிறுவனை நாய் கடித்து அவனுக்கு கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
நாய்களால் உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர் விசிக கட்சி செயலாளர் பாசித் இல்யாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.