சென்னை ஜூன், 13
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பணியிடங்களை கல்வித்துறையுடன் அனுமதி பெற்று நிரப்ப வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக பரிந்துரை வந்தால் நீண்ட காலம் அவகாசம் எடுக்காமல் பத்து வாரத்திற்குள் கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.