திருப்பதி மே, 20
திருப்பதி கோவிலில் 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பக்தர்கள் லட்டு பிரசாதத்திற்காக நீண்ட நேரம் காத்திருப்பதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடித்து தேவஸ்தான ஊழியர்கள் ஐந்து பேரை கைது செய்தனர்.