சென்னை மே, 19
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சரும் அவரது மகனுமான உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு தனி பொறுப்புடன் கூடிய ஆணையர் வேண்டுமென வலியுறுத்தினேன். அதற்கு செவி சாய்த்து முதன்முறையாக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்ததற்கு நன்றி! என குறிப்பிட்டுள்ளார்.