அமெரிக்கா மே, 12
இந்தியா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஜூன் 22-ல் அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் இந்த பயணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர் வேதாந் படேல் தெரிவித்தார். மேலும் அவர் இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு முக்கியமான கூட்டாண்மை உள்ளது என தெரிவித்தார்.