கீழக்கரை மே, 10
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெரு ஹாஸிம் டாக்டர் கிளினிக் அருகில் ரிஸ்வானா காம்ப்ளக்ஸ் வாடகை குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் வடிகால் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளது.
இதனால் வைரஸ் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் இருக்கும் மக்களின் சுகாதாரத்தை அச்சுறுத்தி வருகின்றன. துர்நாற்றம் வீசும் அப்பகுதி மிகவும் அருவருக்கத்தக்க காட்சியளிக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கீழக்கரை நகராட்சியில் முறையிட்டும் இதுநாள் வரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.