சென்னை மே, 4
கோடையின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் வியாழக்கிழமையான இன்று தொடங்குகிறது. கோடை காலமானது ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் வரை இருக்கிறது. இந்த நான்கு மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெயிலீ தாக்கம் அதிகரித்து காணப்படும் அந்த வகையில் இன்று தொடங்கும். கத்தரிவெயில் 29ம் தேதி வரை நீள்கிறது. இக்காலத்தில் வெயிலின் அளவு 100 முதல் 107 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். எனவே பொதுமக்கள் வெயிலின் உஷ்ணத்தை போதுமான அளவு தவிர்த்து பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.