கடலூர் மே, 2
சில இடங்களில் உயிரெழுத்து மின்கம்பிக்கு கீழாக, தாழ்வழுத்த மின்கம்பியும் செல்லும் சில சமயம் இவை ஒன்றை ஒன்று உரசி மின்வெட்டு ஏற்படுவதுண்டு. அவ்வகையில் கடலூர் அருகே உள்ள கிராமத்தில் இதேபோன்று மின் கம்பிகள் உரசி மின்வெட்டு ஏற்படுவதாக மின்வாரியத்தில் புகார் அளிக்க வந்த மின்வாரிய ஊழியர்களும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்காமல் ஒன்றை ஒன்று உரசாமல் இருக்க செங்கலை கட்டி தொங்கவிட்டு சென்றுள்ளனர். இந்த செயல் மின் தடையை சரி செய்ய நவீன உத்தியா என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.