சேலம் மே, 1
தென்னிந்தியாவின் வளிமண்டலத்தில் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் சந்திக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் போடப்பட்டுள்ளது. இதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.