துபாய் ஏப்ரல், 23
ஐக்கிய அரபு அமீரகத்தில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊர் மக்கள் ஒன்றிணைந்து பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி துபாயில் உள்ள அல் தவார் பூங்காவில் நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், ஈமான் ஒருங்கிணைப்பாளர் நஜீம் மரிக்கா, கிரீன் க்ளோப் நிறுவனர் ஜாஸ்மின் மற்றும் ஈமான் செயற்குழு உறுப்பினர்கள் அஸ்கர், முஜிபுர் ரஹ்மான், ஜாகிர், ஜமால் ஆகியோர்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தேவிபட்டினம் நலச்சங்கத்தின் தலைவர் ஃபலீல், அபுதாபி செயலாளர் ஹாஜா, துபாய் செயலாளர் சமீர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியை எஸ்.பி.எஸ் நிஜாம் அக்பர் தொகுத்து வழங்க தேவிபட்டினம் நலச்சங்கம், துவா அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.