அரியலூர் ஏப்ரல், 21
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களை சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, அரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
மேலும் பள்ளி சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியானது, மேள தாளங்களுடன், சிறுவளூர், நெருஞ்சிகோரை, பாலகிருஷ்ணாபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது. குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதால், கிடைக்கும் பயன்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழி நெடுகிலும் விநியோகிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா, துணை தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா ,கல்வி ஆர்வலர் கருணாநிதி, பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுத் தலைவர் மனோகரன், ஊராட்சி செயலர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ் ,கோகிலா, தங்கபாண்டி ,வீரபாண்டி கபிலஷா ஆகியோர் செய்திருந்தனர்.