அமெரிக்கா ஏப்ரல், 21
வானிலிருந்து ஒரே நேரத்தில் குதித்து அசத்தியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த 101 ஸ்கைடைவர்ஸ். இதில் சுவாரஸ்யமே இவர்கள் அனைவரும் 60 வயதை கடந்தவர்கள் என்பதுதான். உலக சாதனை செய்வதற்காக தனி குழு அமைத்த தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்கைட்ரைவ் அமைப்பு தங்களது நான்காவது முயற்சியில் ஒன்றாக குதித்து இரண்டு உலக சாதனைகளை முறியடித்துள்ளனர். இதற்கு முன்பாக 75 பேர் ஒன்றாக குதித்ததே உச்சபட்ச சாதனையாக இருந்தது.