துபாய் ஏப்ரல், 21
ஐக்கிய அரபு அமீரக துபையில் அரசு அனுமதியுடன் செயல்படும் தமிழ் சமூக அமைப்பான துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லாகான் தலைமையில் துணைத் தலைவர் ஏஜெகமால் மற்றும் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற திருக்குர்ஆன் கிராத் போட்டியில் சின்னஞ்சிறு மழலைகள் மற்றும் சிறுவர் சிறுமிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் 4 குழந்தைகளுக்கு முதல் பரிசாக தங்க நாணயங்களை ஆந்திர அசோசியேஷன் தலைவர் ஜாபர் மற்றும் டாப் ஸ்டார் குரூப் நிறுவனத்தின் நிறுவனர் எஸ்ஆர் பைரோஸ் கான் வழங்கினார்.
இரண்டாம் பரிசினை நான்கு குழந்தைகளுக்கு 150 திர்ஹம்ஸ் மதிப்புள்ள பரிசு கூப்பன்களை துபாய் மொலினா நிறுவனத்தார் வழங்கினர். மூன்றாம் பரிசினை நான்கு குழந்தைகளுக்கு பார்ம் பாஸ்கெட் வலசை ஃபைசல் வழங்கினார். மேலும் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசினை E2எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாகி ஷார்ஜா ராஜா வழங்கினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கப்பல் போக்குவரத்து துறை ஆலோசகர் அமீர்கான் மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத் மற்றும் கல்லிடைக்குறிச்சி முகைதீன் மற்றும் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி பொதுச்செயலாளர் ஹமீது யாசின் அறிவுரையின்படி நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான பணிகளை செய்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.