ராமநாதபுரம் ஏப்ரல், 19
மீனவர்களுக்காக எந்நேரமும் தன் வீட்டு கதவு திறந்தே இருக்கும் என்று கூறியுள்ளார் தமிழக ஆளுநர் ரவி. ராமநாதபுரம் அருகே மீனவ பிரதிநிதிகள் உடன் கலந்துரையாடிய அவர் நாட்டின் வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு முக்கியமானது. மீனவர்களின் பிரச்சினைகளை மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழாக்களில் மீனவர்கள் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.