ராமநாதபுரம் ஏப்ரல், 20
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் சென்ற ஆளுநர் அங்கிருக்கும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த நுங்கு, பதநீர் ஆகியவற்றை சாப்பிட்டார். தொடர்ந்து உரையாடிய அவர் நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். உலகிற்கே உணவு வழங்கும் அளவிற்கு இந்தியா உயர்ந்துள்ளது. உணவு உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்கிய நிலையில் ஆங்கிலேயர் வருகையால் பணப்பயிர்கள் அதிகம் வைக்கப்பட்டன என்றார்.