சென்னை ஏப்ரல், 18
தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். rte.tn.schools.in என்று இணையதளத்தில் ஏப்ரல் 20 முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மே 21-ல் முடிவு அறிவிக்கப்படும்.