கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 14
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தாசகவுண்டன் ஏரியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தினா கீழ் ரூ.79 லட்சம் மதிப்பில், ஏரியை புனரமைக்கும் பணி மற்றும் ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் இதர வளர்ச்சி திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் காந்தி, சக்கரபாணி ஆகியோர் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.