சென்னை ஏப்ரல், 17
நீட் தேர்வை ஒத்தி வைக்கும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மே 7ல் நடக்கவுள்ள இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அண்மையில் தான் முடிந்தது. நீட்டுக்கு தயாராக போதிய நேரமில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். இதனால் நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி ட்விட்டரில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களை டேக் செய்து வலியுறுத்தி வருகின்றனர்.