புதுடெல்லி ஏப்ரல், 17
கச்சா எண்ணெய் விலை உயர்வு ரஷ்யா- உக்ரைன் போர் ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளியில் இருந்து சவால்கள் ஏற்பட உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளில் பொருளாதாரம் மந்த நிலை ஏற்பட்டால் அதன் பாதிப்பு இந்திய பொருளாதாரத்தில் நிச்சயம் இருக்கும் என்றார் இதனால் ஏற்றுமதி குறைந்து உற்பத்தி துறை மந்தமாகும் என்று தெரிவித்துள்ளார்.