காஞ்சிபுரம் ஏப்ரல், 17
கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நூறு சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு பிரதமர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில், ஆட்சியருக்கு விருது வழங்கப்பட உள்ளது.