பரமக்குடி ஏப்ரல், 14
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியின் 23ம் ஆண்டு விளையாட்டு மற்றும் ஆண்டு விழா அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். அதன் பின்பு விளையாட்டு மற்றும் ஆண்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.