கன்னியாகுமரி ஏப்ரல், 14
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. குமரி மாவட்டம் தோவாளை மலச்சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ 2000 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ மல்லி 1300 ரூபாய்க்கும், அரளி ரூ. 400க்கும் விற்பனையானது. சம்பங்கி ரூ. 150 மரிக்கொழுந்து ரூ. 150, கனகாம்பரம் ரூ.400 என விற்பனையானது. இது சில்லறை கடைகளில் இன்னும் அதிகமாகவே விற்பனையாகும்.