மதுரை ஏப்ரல், 14
தெற்கு ரயில்வேக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை ஒதுக்கி உள்ளது ரயில்வே வாரியம். முற்றிலும் இந்திய தயாரிப்பாக விளங்கும் இந்த ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேக்குட்பட்ட சென்னையில் இருந்து மைசூர் மற்றும் கோவைக்கு தலா ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கேரளா அல்லது தமிழக தென் மாவட்டமான மதுரைக்கு இந்த ரயில் சேவை வரலாம் என தெரிகிறது.