தஞ்சாவூர் ஏப்ரல், 12
தஞ்சாவூர் மாவட்டம் மேல்வேளி கிராமத்தில் மின் கம்பி மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளங்கோவன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இளங்கோவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.