ராமநாதபுரம் ஏப்ரல், 12
ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர்களை கண்டறிந்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வான நான்கு மாணவ மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று திரும்பினார். பின் நான்கு அரசு பள்ளி மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் நேரில் சந்தித்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.