புதுடெல்லி ஏப்ரல், 7
மார்பர்க் எனும் வைரஸ் ஆப்பிரிக்கா நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும் இது மிக தீவிரமான பாதுகாப்புகளை பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பழந்தின்னி வவ்வால்களிடமிருந்து இந்த வைரஸ் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உள்ளுறுப்புகள் உடலின் வெளிப்புறங்களில் இரத்த கசிவு போன்றவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸ் 88 சதவீத உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.